தோஹா: பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக கத்தார் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே ஒரு வாரத்துக்கும் மேலாக நடந்த சண்டையில் பலர் உயிரிழந்தனர், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இதனையடுத்து ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் பிரதிநிதிகள் தோஹாவில் தங்களுக்கு இடையேயான மோதலை தீர்க்க பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் கத்தார் மற்றும் துருக்கி நாடுகள் மத்தியஸ்தர்களாக செயல்பட்டனர்.