கொல்கத்தா: “பயங்கரவாதத்தை பொறுத்துக் கொள்ளவே முடியாது. அதனால், பாகிஸ்தான் உடனான கிரிக்கெட் ரீதியிலான உறவுகளை இந்திய கிரிக்கெட் அணி முற்றிலுமாக முறித்துக் கொள்ள வேண்டும். அது ஐசிசி தொடர்கள் என்றாலும் சரி” என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.
கடந்த 22-ம் தேதி அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். பயங்கரவாதிகளின் இந்த தாக்குதல் தேசம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தான் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவரான கங்குலி, தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.