
சண்டிகர்: கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் எல்லைப் பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் ஆயுத, போதைப் பொருட்கள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது.
இதை தடுக்க பஞ்சாப் மாநில காவல் துறை சார்பில் எல்லைப் பகுதிகளில் ட்ரோன் தடுப்பு சாதனங்கள் நிறுவப்பட்டு உள்ளன. இவற்றின் மூலம் அண்மை காலமாக பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் கடத்தல் முயற்சிகள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டு வருகின்றன.

