இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் பதற்றத்தால், பாகிஸ்தான் பங்குச் சந்தைகள் பெரும் சரிவைச் சந்தித்துள்ளன. அந்நாட்டின் முக்கிய பங்குக்குறியீடான ‘கேஎஸ்இ – 100’ ஏப்ரல் 22 முதல் 30-ம் தேதி வரை மட்டும் 8,000 புள்ளிகள் (6%) சரிவடைந்துள்ளது.
ரத்தக்களரி ஆன ஏப்.30: ஏப்ரல் மாத இறுதி பாகிஸ்தான் சந்தை வர்த்தகமானது ரத்தக்களரியாக நிறைவடைந்தது. ஏப்ரல் 30 அன்று கேஎஸ்இ – 100 ஒரேநாளில் 3,545 புள்ளிகள் (3.09 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 111,326.57 ஆக இருந்தது. பல ஹெவி வெயிட் நிறுவனப் பங்குகள் பெரும் சரிவைச் சந்தித்திருந்தன. குறிப்பாக, நான்கு முக்கிய நிறுவனங்களின் பங்குகள் மட்டும் மொத்தமாக 1,132 புள்ளிகள் சரிந்திருந்தன.