டிரினிடாட்: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 202 ரன்களில் படுதோல்வி அடைந்தது பாகிஸ்தான் அணி. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என மேற்கு இந்தியத் தீவுகள் அணி வென்றுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இதில் டி20 தொடரை 2-1 என பாகிஸ்தான் வென்றது. தொடர்ந்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடின. இந்த தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வென்றது. இரண்டாவது போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி வென்றது.