
காபூல்: பாகிஸ்தானுக்கு சொந்தமான ராணுவ டாங்கிகளை ஆப்கானிஸ்தான் ராணுவம் சிறைபிடித்ததாக தலிபான் செய்தித்தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாகித் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு ஆப்கானிய படைகள் தகுந்த பதிலடி கொடுத்தன. இதில், ஏராளமான பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானுக்கு சொந்தமான ராணுவ டாங்கிகள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. பாகிஸ்தானின் ராணுவ கட்டமைப்புகளை ஆப்கன் படைகள் அழித்துவிட்டன” என்று தெரிவித்துள்ளார்.

