இஸ்லாமாபாத்: உலகையே உலுக்கிய பாகிஸ்தான் ரயில் கடத்தல் சம்பவத்தில் தற்போதைய நிலவரப்படி 16 தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர், 104 பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் பயணிகள் ரயிலை தீவிரவாதிகள் நேற்று (மார்ச் 11) சிறைபிடித்தது. அதில் பயணம் செய்த 30 பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 500-க்கும் மேற்பட்ட பயணிகள், பிணைக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். உலகளவில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில் தற்போதைய நிலவரப்படி 16 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 104 பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். எஞ்சிய பயணிகளை மீட்கும் வகையில் தீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் கடுமையான துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.