பாகிஸ்தான்: பாகிஸ்தானில் பணய கைதிகளுடன் சிறைபிடிக்கப்பட்ட 346 ரயில் பயணிகளை பத்திரமாக மீட்கப்பட்டதால் சுமார் 30 மணி நேரம் நீடித்த பதற்றம் முடிவுக்கு வந்தது. பாகிஸ்தான் மாகாணத்தில் குவெட்டாவிலிருந்து பெஷாவருக்கு சுமார் 440 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயிலை குண்டு வீசியும், துப்பாக்கியால் சுட்டும் பலுசிஸ்தான் விடுதலை படையினர் சிறைபிடித்தனர்.
பயணிகளை பணயக்கைதிகளாக சிறைபிடித்த நிலையில் உடனடியாக தாக்குதல் நடத்திய ராணுவம் 104 பேரை மீட்டது. 2வது நாளாக நேற்றும் பலமணிநேரம் ராணுவ நடவடிக்கை தொடர்ந்தது. அப்போது, மேலும் 242 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதனை அடுத்து மொத்தம் 346 பேரை மீட்டதாகவும் 33 கிளர்ச்சியாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த மோதலில் ராணுவ வீரர்கள் 4 பேர் உயிரிழந்த நிலையில் 27 பயணிகளை கிளர்ச்சியாளர்கள் சுட்டு கொன்றதாக பாகிஸ்தான் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.
இதனிடையே முஸ்காப் குன்று பகுதியில் ரயிலை சிறைபிடித்தபோது தண்டவாளத்தை வெடிகுண்டுகள் மூலம் தகர்த்த வீடியோ காட்சிகளை பலூச் கிளர்ச்சி படையினர் வெளியிட்டுள்ளனர். இயற்கையும், கனிமமும் நிறைந்த பலுசிஸ்தானை தனி நாடக அறிவிக்ககோரி பலூச் விடுதலை ராணுவம் நீண்டகாலமாக போராடி வருகிறது. அவ்வப்போது ராணுவத்தினர், அதிகாரிகள் ரயில்களை குறிவைத்து இந்த அமைப்பினர் தாக்குதல் நடத்தியும் வருகின்றனர்.
The post பாகிஸ்தான் ரயில் கடத்தல்: தண்டவாளத்தை வெடிகுண்டுகள் மூலம் தகர்த்த வீடியோ வெளியீடு appeared first on Dinakaran.