இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மற்றும் ரஷ்ய அரசுகளுக்கு இடையே சுகாதாரம், வர்த்தகம், தொழில்துறை ஒத்துழைப்பு, கல்வி உள்ளிட்ட துறைகளை உள்ளடக்கிய எட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நேற்று முன்தினம் கையெழுத்தானது. ரஷ்யாவிற்கான பாகிஸ்தான் தூதர் முகமது காலித் ஜமாலி அரசு நடத்தும் ரஷ்ய தொலைக்காட்சியான ரஷ்யா டுடேவுக்கு பேட்டியளிக்கையில்,‘‘ ரஷ்யா மற்றும் மத்திய ஆசியாவை இணைக்கும் 7,200 கிமீ நீளமுள்ள ரயில் பாதை திட்டத்தில் பாகிஸ்தான் சேரத் தயாராக இருக்கிறது என்றார். பாகிஸ்தான் எரிசக்தி அமைச்சர் அவாய்ஸ் அகமது கான் லெகாரி ரஷ்யா டுடேவிடம் கூறுகையில் ‘‘அடுத்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில், ரஷ்யாவிலிருந்து பாகிஸ்தானுக்கு பொருட்களை கொண்டு செல்லும் சரக்கு ரயில் சோதனை ஓட்டம் தொடங்கும்’’ என்றார்.
The post பாகிஸ்தான்-ரஷ்யா சரக்கு ரயில்: வரும் மார்ச்சில் சோதனை ஓட்டம் appeared first on Dinakaran.