இஸ்லாமாபாத்: காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து பாகிஸ்தானுக்கு எதிராக சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்தது. மேலும் ஆபரேஷன் சி்ந்தூர் என அதிரடி நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை அழித்தது. பாகிஸ்தானும் தாக்குதல் நடத்தியது. இதனால் இரு தரப்புக்கும் இடையே போர்ப்பதற்றம் ஏற்பட்டு பேச்சுவார்த்தைக்கு பின் அடங்கியுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் வான் எல்லையில் இந்திய விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த தடை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பின் (ஐசிஏஓ) விதிகளின்படி, ஒரே நேரத்தில் ஒரு மாதத்திற்கு மேல் வான்வெளி கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது என்பதால், கடந்த மாதம் பாகிஸ்தான் விதித்த தடை மே 23ம் தேதி வரை அமலில் உள்ளது. இந்நிலையில் அந்த தடையை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டது.
The post பாகிஸ்தான் வான் எல்லையில் இந்திய விமானங்கள் பறக்க மேலும் ஒரு மாதம் தடை appeared first on Dinakaran.