வாஷிங்டன்: நீண்ட துாரம் உள்ள இலக்குகளை சென்று தாக்குதல் நடத்தும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை தயாரிக்கும் திட்டத்தில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது. பாலிஸ்டிக் ஏவுகணை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தேசிய மேம்பாட்டு வளாகம் என்ற அரசுக்கு சொந்தமான நிறுவனம் மற்றும் 3 நிறுவனங்களின் மீது அமெரிக்க அரசு பொருளாதார தடை விதித்துள்ளது.
இந்த நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் ஜான் பைனர் சர்வதேச அமைதிக்கான கார்னகி அறக்கட்டளை நிகழ்ச்சியில் பேசுகையில்,‘‘நீண்ட தூர ஏவுகணை அமைப்புகள் முதல் கருவிகள் வரை அதிக அளவில் அதிநவீன ஏவுகணை தொழில்நுட்பத்தை பாகிஸ்தான் உருவாக்கி வருகிறது.
இந்த ஏவுகணைகள் அமெரிக்கா உள்பட தெற்காசியாவிற்கு அப்பால் உள்ள இலக்குகளை தாக்க முடியும். பாகிஸ்தானின் ஏவுகணை திட்டம் பாகிஸ்தானுக்கு வளர்ந்து வரும் அச்சுறுத்தல்’’ என்று குறிப்பிட்டார். கடந்த 2021ல் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்பட்டதில் இருந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்துள்ளது.
The post பாக்.பாலிஸ்டிக் ஏவுகணை திட்டம் அமெரிக்காவிற்கு அச்சுறுத்தல்: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எச்சரிக்கை appeared first on Dinakaran.