கரூர்: பாஜகவின் ஏஜென்டாக ஆளுநர் ரவி தமிழ்நாட்டில் செயல்படுகிறார் என கரூர் எம்.பி. செ.ஜோதிமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.
கரூர் ஜவஹர் கடைவீதி பகுதியில் இன்று (ஜன.7-ம் தேதி) எம்.பி. செ.ஜோதிமணி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ரவி தொடர்ந்து 2-வது முறையாக அவையை அவமதித்து உரையை வாசிக்காமல் சென்றுவிட்டார்.