சென்னை: “பாஜகவை கழற்றி விட்டு, தமிழக வெற்றிக் கழகத்துடன் சேரலாமா என்ற முயற்சியில் அதிமுக ஈடுபடுகிறது” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் நிர்ப்பந்தத்தால் ஏற்பட்டதன் விளைவாக கடும் கருத்து வேறுபாடுகள் இரு கட்சிகளிடையே சமீபகாலமாக எழுந்து வருகின்றன. அதிமுகவை பாஜக கூட்டணியில் சேர்ப்பதற்காக உள்துறை அமைச்சர் என்ற முறையில் வருமான வரித் துறை, அமலாக்கத் துறை ஆகியவற்றின் மூலம் சாம, பேத, தான, தண்டங்களை பயன்படுத்தி கூட்டணிக்கான அறிவிப்பு அமித் ஷாவால் வெளியிடப்பட்டது.