சென்னை: அதிமுக – பாஜக கள்ளக்கூட்டணியை நொடிக்கொரு முறை இந்த நாட்டுக்கு நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சமூக ஆர்வலர் ஜகபர் அலி மரணம் தொடர்பாக அண்ணாமலையும், பழனிசாமியும் ஒரே பதிவை வெளியிட்டுள்ளார்கள். அண்ணாமலை போட்ட பதிவை அப்படியே வழிமொழிந்து பசையே இல்லாமல் காப்பி பேஸ்ட் செய்திருக்கிறார். பத்துவரி பதிவைக் கூட சொந்தமாக எழுத எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் இல்லை. பாஜக மேலிடம் அண்ணாமலைக்கு எழுதித் தந்த பதிவை எடுத்து பதிவிடும் அளவுக்கு பாஜகவின் அடிமையாக மாறிவிட்டார். 2 கட்சிகள் ஒரே மாதிரியான அறிக்கை விடும் வழக்கத்தை தமிழ்கூறும் நல்லுலகத்துக்கு அறிமுகம் செய்துள்ளார் என அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
The post பாஜக – அதிமுக காப்பி பேஸ்ட் பதிவு: அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் appeared first on Dinakaran.