சென்னை:பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் இடையே சந்தர்ப்பவாத கூட்டணி ஏற்பட்டுள்ளதால் மக்கள் திமுக தலைமையிலான அணிக்கு மேலும் வலுசேர்ப்பார்கள் என்று நம்புவதாக சிபிஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.