புதுடெல்லி: வக்பு திருத்த மசோதாவுக்கு தனகு கடுமையான எதிர்ப்பினை தெரிவித்துள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பாஜக அனைத்து விஷயங்களிலும் தலையிட்டு, அவைகளை கட்டுப்படுத்த விரும்புகிறது என்று சாடியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் கூறுகையில், "வக்பு திருத்த மசோதாவை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம், ஏனெனில் பாரதிய ஜனதா கட்சி அனைத்து விஷயங்களிலும் தலையிட விரும்புகிறது. எல்லா இடங்களையும் அவர்கள் கட்டுப்படுத்த விரும்புகிறார்கள். அது ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு அல்லது வேறு எந்த முடிவாக இருந்தாலும் சரி, அவர்கள் (பாஜக) மற்றவர்களிடமிருந்து அல்லது மக்களிடமிருந்து ஏதாவது ஒன்றைப் பறிக்கவே விரும்புகிறார்கள். எதிர்க்கட்சிகள் சமாதான அரசியலில் ஈடுபடுகிறோம் என்று பாஜக குற்றம்சாட்டுகிறார்கள்.