பாஜக ஆட்­சி­யா­ளர்­க­ளும் அவர்­க­ளின் ஏஜென்ட்­டு­க­ளும் மட்­டுமே மொழித் திணிப்பை ஆதரித்து பேசி வருவதாக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சை குறிப்பிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: எந்த மொழி மீதும் தமி­ழர்­க­ளுக்கும் தமிழகத்துக்கும் தனிப்­பட்ட வெறுப்பு ஒருபோதும் இருந்­த­தில்லை. அதேநேரம், எந்த மொழி­யா­வது திணிக்­கப்­பட்­டால் தமிழகம் போராட்­டக் களம் காணா­மல் இருந்­த­தில்லை, தேசிய கல்­விக் கொள்கை வழி­யாக மும்­மொ­ழித் திட்டம் என்ற பெய­ரில் இந்­தி­யைத் திணிக்­கும் மத்திய பாஜக அர­சின் சதி­யை உணர்ந்­து­தான் ஒட்­டு­மொத்த தமிழகமும் அதனை எதிர்க்­கி­றது.