ஹைதராபாத்: "எனது தாயார் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை. அவர் எடுத்துக்கொண்ட தூக்க மாத்திரை ஓவர் டோஸ் ஆகிவிட்டது. தயவுசெய்து தவறான தகவலைப் பரப்பி விஷயத்தை பெரிதுபடுத்தாதீர்கள்" என்று பிரபல பின்னணி பாடகி கல்பனாவின் மகள் தெரிவித்துள்ளார்.
பின்னணி பாடகி கல்பனா தனது வீட்டில் மயங்கிய இருந்த நிலையில், ஹைதராபாத் போலீஸாரால் மீட்கப்பட்டு செவ்வாய்க்கிழமை (மார்ச் 4) தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வெண்டிலேட்டரின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கல்பனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கும் அவரின் மூத்த மகளுக்கும் பிரச்சினை என்றும், கல்பனா தற்கொலைக்கு முயன்றார் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில், குடும்பப் பிரச்சினை காரணமாக கல்பனாவின் தற்கொலை முயற்சித்தாக கூறப்படுவதை அவரது மகள் மறுத்துள்ளார். தனது தாயாரின் உடல்நிலை குறித்து இன்று (மார்ச் 5) செய்தியாளர்களிடம் பேசினார்.