சென்னை: பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலின் எக்ஸ் பக்கத்தில் அத்துமீறல் நடந்துள்ளது. ஹேக் செய்யப்பட்ட தனது பக்கத்தை எவ்வளவோ முயற்சி செய்தும் மீட்க முடியவில்லை என்று ஸ்ரேயா கோஷல் கவலை தெரிவித்துள்ளார்.
பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் இந்தி, தமிழ், தெலுங்கு, நேபாளி, பஞ்சாபி, துளு, ஆங்கிலம் உட்பட பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். குறிப்பாக, தமிழில் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். அவரின் தனது எக்ஸ் பக்கம் முடக்கப்பட்டிருப்பதாக இன்ஸ்டாவில் தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில், “ரசிகர்கள் மற்றும் நண்பர்களுக்கு… என்னுடைய எக்ஸ் பக்கம் கடந்த 13-ஆம் தேதி முதல் முடக்கப்பட்டு உள்ளது.