கடலூர் / விழுப்புரம்: ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்த குடியிருப்புகளில் இருந்த பொதுமக்கள் மீட்கப்பட்டு, பாதுகாப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்த குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்கள் மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதன்படி, கடலூர் மாவட்டத்தில் 17 நிவாரண முகாம்களில், 703 பேர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.