புதுடெல்லி: பாதுகாப்பு, வர்த்தக உறவுகளை அதிகரிக்க இந்தியாவும் இந்தோனேசியாவும் முடிவு செய்துள்ளன.
குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இந்தோனேஷிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பு இரு தலைவர்களுக்கு இடையேயான தனிப்பட்ட சந்திப்பாகவும், பின்னர் இரு நாடுகளின் உயர் மட்டக் குழுக்கள் இடையேயான சந்திப்பாகவும் இருந்தது.