டெல்லி ஹைதர்பூர் மேம்பாலத்தில் சுற்றித்திரிந்த பசுக்களுக்கு புகலிம் ஒன்றை கண்டறியுமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் ரேகா குப்தா நேற்று உத்தரவிட்டார்.
டெல்லி ஹைதர்பூர் மேம்பாலத்தில் டெல்லி முதல்வர் ரேகா குப்தா நேற்று 'கான்வாய்' எனப்படும் பாதுகாப்பு வாகனங்களுடன் காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது பாலத்தில் பசுக்கள் சுற்றித் திரிந்ததால் முதல்வரின் கான்வாய் திடீரென நிறுத்தப்பட்டது. டிரைவர் ஒருவர் உரிய நேரத்தில் பிரேக் போட்டு காரை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர். இதையடுத்து பாலத்தில் பசுக்கள் திரிவதை பார்த்த முதல்வர் ரேகா குப்தா, காரை விட்டு இறங்கினார்.