லாகூர்: வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஆசிய கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அந்த அணியின் அனுபவ வீரர்களான பாபர் அஸம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் இடம்பெறவில்லை.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவு அந்த நாட்டு கிரிக்கெட் ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சி கொள்ள செய்துள்ளது. ஏனெனில், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்களில் பாபரும், ரிஸ்வானும் டாப் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். ஐசிசி டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் பாபர் 18, ரிஸ்வான் 20-வது இடத்திலும் உள்ளனர்.