ராமேசுவரம்: பாம்பனில் புதிதாக அமைக்கப்பட்ட ரயில் பாலம் மற்றும் கப்பல்கள் அதை கடந்து செல்லும் வகையில் நாட்டிலேயே முதல்முறையாக அமைக்கப்பட்டுள்ள செங்குத்து தூக்குப் பாலம் ஆகியவற்றை பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். ரூ.8,300 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
ராமேசுவரம் அடுத்த பாம்பனில் பழைய ரயில் பாலத்தின் நடுவே உள்ள தூக்குப் பாலத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அதன் அருகிலேயே புதிய ரயில் பாலம் கட்ட திட்டமிடப்பட்டது. பிரதமர் மோடி கடந்த 2019-ல் காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.