தமிழக அரசு சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு ஏப்.29 முதல் மே 5-ம் தேதி வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும் என்று சட்டப்பேரவையில், விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தாவது: ‘தமிழுக்கும் அமுதென்று பேர்; அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்ற அழகுத் தமிழின் பெருமையைப் பேசும் வரிகளையும், “புதியதோர் உலகம் செய்வோம், கெட்டப் போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்” என்ற எழுச்சி மிகுந்த வரிகளையும், ‘எங்கள் வாழ்வும், எங்கள் வளமும், மங்காத தமிழென்று சங்கே முழங்கு, எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டேன்!’ என்னும் போர்ப்பாடல் என திராவிடப்பண் பாடியும், காலத்தை வென்ற பாடல்களை நமக்குத் தந்தவர் பாவேந்தர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.