கோவை: கோவை பாரதியார் பல்கலை.யில் 2016-ல் 500 கணினிகள் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்கள் ஆகியவை ரூ.84.57 லட்சம் மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்டன. ஆனால், தனித்தனியாக ஒப்பந்தப்புள்ளி கோரி இவற்றைக் கொள்முதல் செய்ததால் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து, பல்கலை. தொடர்புடையவர்களிடம் விசாரணை நடத்த சிண்டிகேட் கூட்டத்ல் அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தி, பாரதியார் பல்கலை. முன்னாள் துணைவேந்தர் கணபதி, முன்னாள் பதிவாளர்கள் வனிதா, மோகன், சரவண செல்வன் மற்றும் ஓய்வுபெற்ற பேராசிரியர்கள், தற்போது பணியில் இருக்கும் பேராசிரியர்கள், நிதிப்பிரிவு அலுவலர்கள் என மொத்தம் 16 பேர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.