மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 143-வது பிறந்தநாள் விழா இன்று (டிசம்பர் 11) நாடு முழுவதிலும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பாரதியின் முழுமையானப் படைப்பு நூல்களின் தொகுப்பை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிடுகிறார்.
கடந்த 2014-ல் பிரதமராகப் பதவி ஏற்றது முதல் மோடி தமிழின் பெருமைகளை பேசி வருகிறார். இவரது பேச்சுக்கள் மூலம் உலகின் பழமையான மொழி தமிழ் என மத்திய அரசின் சார்பிலும் முதன்முறையாக ஏற்கப்பட்டுள்ளது. இதேபோல், திருவள்ளுவர் மற்றும் சுப்பிரமணிய பாரதியின் பெருமைகளையும் பிரதமர் மோடி பேசி வருகிறார். அந்தவகையில், பாரதியாரின் 143-வது பிறந்தநாளான இன்று, காலவரிசையில் தொகுக்கப்பட்ட மகாகவியின் படைப்புகளை தொகுப்பு நூல்களாக பிரதமர் மோடி வெளியிடுகிறார்.