சென்னை: தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க மாநில தலைவர் ரெ.தங்கம் வெளியிட்ட அறிக்கை: மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சியில் நியமன முறையில் பிரதிநிதித்துவம் வழங்கிட வரலாற்றுச் சிறப்புமிக்க ஆணை வெளியிட்டதுடன், திமுகவில் மாற்றுத்திறனாளிக்கு சிறப்பு திட்டங்கள் அறிவித்தமைக்காக மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் நடைபெற்ற நன்றி பாராட்டு விழாவில் பங்கேற்று ஏற்புரை ஏற்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், இந்த மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்த திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்பி, துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்பி, அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், கீதாஜீவன், பி.கே.சேகர்பாபு, ராஜ கண்ணப்பன், முன்னாள் அமைச்சர் பொன்முடி, எம்பிக்கள் தமிழச்சி தங்கபாண்டியன், எம்.எம்.அப்துல்லா, டாக்டர் கனிமொழி, சல்மா, எம்எல்ஏக்கள் நா.எழிலன், ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, தாயகம் கவி, அரவிந்த் ரமேஷ், மாதவரம் எஸ்.சுதர்சனம், காரப்பாக்கம் கணபதி, பகுதி செயலாளர்கள் மா.பா.அன்பு துரை, ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினர் வி.எஸ்.ராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி பாராட்டு விழாவில் பங்கேற்க அனைத்து மாவட்டத்திலும் திரளாக வருகை தந்த தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தினருக்கும், மாநில, மாவட்ட சங்க நிர்வாகிகளுக்கும் மற்றும் அனைத்து சங்க பிரதிநிதிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post பாராட்டு விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி: மாற்றுத் திறனாளிகள் சங்க தலைவர் தங்கம் அறிக்கை appeared first on Dinakaran.