புதுடெல்லி: பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் செயல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராம ராவ் (கேடிஆர்) மீதான ரூ.55 கோடி நிதி மோசடி வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத் துறை அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அவரைப் போலவே, மூத்த ஐஏஎஸ் அதிகாரி அரவிந்த் குமார், ஹைதராபாத் பெருநகர வளர்ச்சி ஆணையத்தின் மூன்னாள் தலைமை பொறியாளர் பிஎல்என் ரெட்டி ஆகியோருக்கும் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
கேடிஆர் ஜனவரி 7ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும் படியும், அரவிந்த் குமார் மற்றும பிஎல்என் ரெட்டி முறையே ஜனவரி 2, 3 ஆகிய தேதிகளில் விசாரணைக்கு ஆஜராகும் படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபார்முலா இ பந்தயம் வழக்கு தொடர்பாக மத்திய விசாரணை அமைப்பு கேடிஆர், மற்ற இருவர் மீது பணமோசடி வழக்கு தொடர்ந்ததைத் தொடர்ந்து இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.