குப்பம்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது குப்பம் தொகுதிக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று சென்றார். குப்பம் திராவிட பல்கலைக்கழக வளாகத்தில் ‘சுவர்ண குப்பம் விஷன் -2029’ எனும் நிகழ்ச்சியில் பங்கேற்ற சந்திரபாபு நாயுடு பேசியதாவது: ஆந்திராவுக்கு நான் முதல் வராக இருந்தாலும், குப்பம் தொகுதி மக்களுக்கு நான் எம்.எல்.ஏ.தான். என்னை 8 முறை தொடர்ந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுத்துள்ளீர்கள். உங்களுக்கு என் வாழ்நாள் முழுவதும் நன்றிக் கடன் பட்டுள்ளேன்.
கடந்த ஆட்சியினரின் காழ்ப்புணர்வால் கடந்த 5 ஆண்டுகளில் இந்த தொகுதி எவ்வித வளர்ச்சி யையும் காணவில்லை. இனி குப்பத்தின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. 2029-க்குள் ஒரு மாடல் தொகுதியாக மாற்றிக் காட்டுவேன். இந்த தொகுதியின் வளர்ச்சிக்காக ஒரு இளம் ஐஏஎஸ் அதிகாரியை நியமித்துள்ளேன். இந்த தொகுதியில் உள்ள 65 ஆயிரம் குடும்பத்தினரும் முன்னேற வழிவகுக்கப்பட்டு வருகிறது. மிகப்பெரிய தொழிற்சாலைகள் இங்கு அமைய உள்ளன.