வாஷிங்டன்: அமெரிக்காவில் பல சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட கைதான நிதியாளர் ஜெப்ரி எப்ஸ்டீன் கடந்த 2019ல் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். அமெரிக்காவையே உலுக்கிய பாலியல் குற்றவாளியான எப்ஸ்டீனின் சீல் வைக்கப்பட்டு ஆவணங்களில் அதிபர் டிரம்பின் பெயர் இருப்பதாக சமீபத்தில் எலான் மஸ்க் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், எப்ஸ்டீனுக்கு அதிபர் டிரம்ப் பிறந்தநாள் வாழ்த்து கடிதம் எழுதியதாக பிரபல தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. எப்ஸ்டீனின் கூட்டாளி கிஸ்லைன் மேக்ஸ்வெல் கடந்த 2003ல் எப்ஸ்டீனின் 50வது பிறந்தநாளில் வந்த கடிதங்களை தொகுத்து ஆல்பம் தயாரித்துள்ளார்.
அதில் டிரம்ப் எழுதியதாக கூறப்படும் கடிதமும் இடம் பெற்றுள்ளது. இந்த கடிதத்தில் நிர்வாண பெண்ணின் படம் வரையப்பட்டு வாழ்த்துச் செய்தி இடம் பெற்றுள்ளது. மேலும் இதில் டிரம்ப் கையெழுதிட்டுள்ளார். இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் மீதும், ஊடக அதிபர் ரூபர்ட் முர்டோக்கிற்கு எதிராகவும் 10 பில்லியன் டாலர் வழங்கக் கோரி மானநஷ்ட வழக்கை அதிபர் டிரம்ப் தொடர்ந்துள்ளார்.
The post பாலியல் குற்றவாளிக்கு வாழ்த்து கடிதம்; பிரபல பத்திரிகைக்கு எதிராக அதிபர் டிரம்ப் மானநஷ்ட வழக்கு appeared first on Dinakaran.