சென்னை: மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தின் எதிரொலியாக அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் உள்ள ஊழியர்கள் அடையாள அட்டை கேட்டால் கண்டிப்பாக காண்பிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் 2-ம் ஆண்டு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள், பெற்றோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்முறையை கண்டித்து அண்ணா பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசியல் கட்சி தலைவர்களும் இச்சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.