சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில், கோட்டூர் புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் ஏற்கெனவே கைது செய்யப் பட்டுள்ளார். தொடர்ந்து சிறப்பு புலனாய்வுக் குழுவின் பரிந்துரையை ஏற்று, ஞான சேகரனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், ஞானசேகரனின் வீடு அமைந்துள்ள இடம் கோயிலுக்குச் சொந்தமானது என்ற தகவல் வெளியானது. இதையடுத்து, ஞானசேகரனின் அடுக்குமாடி வீட்டை வருவாய்த் துறையினர் நேற்று அளவெடுத்துச் சென்றனர். இந்த வீடு முறைப்படி கட்டப்பட்டுள்ளதா என்பது உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.