மதுரை: பாலியல் வழக்கில் சிறையில் இருக்கும் பாஜக நிர்வாகி எம்.எஸ்.ஷாவுக்கு நிபந்தனையுடன் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் வழங்கியது. மதுரையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் பாஜக மாநில நிர்வாகி எம்.எஸ்.ஷா மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பாலியல் வழக்கில் சிறையில் இருக்கும் எம்.எஸ்.ஷா பாஜக பொருளாதார பிரிவு மாநிலத் தலைவராக உள்ளார்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி எம்.எஸ்.ஷா உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது அடுத்த 10 நாளில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாவிட்டால் மனுதாரருக்கு ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி சக்திவேல் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ‘மனுதாரருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது.
மறு உத்தரவு வரும் வரை சென்னையில் தங்கி இருந்து தினமும் கையெழுத்திட வேண்டும். மனுதாரர் எம்.எஸ்.ஷா மதுரைக்கு வரக்கூடாது; நீதிமன்றத்தில் முன் அனுமதி பெற்றே வர வேண்டும் என்று என்ற நிபந்தனை விதித்தார்.
The post பாலியல் வழக்கில் சிறையில் இருக்கும் பாஜக நிர்வாகி எம்.எஸ்.ஷாவுக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது ஐகோர்ட் கிளை appeared first on Dinakaran.