நடிகை பாவனா நடித்துள்ள ஹாரர் படமான ‘தி டோர்’ வரும் 28-ம் தேதி வெளியாக இருப்பதாகப் படக்குழு அறிவித்துள்ளது. ஜெய்தேவ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கணேஷ் வெங்கட்ராமன், ஜெயபிரகாஷ், சிவரஞ்சனி, நந்த குமார், ஜானி, கிரிஷ், பாண்டி ரவி, சங்கீதா, ரமேஷ் ஆறுமுகம் நடித்துள்ளனர்.
கவுதம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு வருண் உன்னி இசை அமைத்துள்ளார். இந்தப்படத்தை ஜுன் ட்ரீம்ஸ் ஸ்டூடியோஸ் சார்பில் நவீன் ராஜா தயாரித்துள்ளார். சேப்பயர் ஸ்டூடியோஸ் சார்பில் விஜயகாந்த் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.