பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘வேட்டுவம்’ படப்பிடிப்பு சத்தமின்றி தொடங்கப்பட்டுள்ளது.
‘தங்கலான்’ படத்துக்குப் பிறகு, பா.ரஞ்சித் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் முன்னரே திட்டமிடப்பட்ட ‘வேட்டுவம்’ படத்தின் படப்பிடிப்பினை காரைக்குடியில் சத்தமின்றி தொடங்கியுள்ளார் பா.ரஞ்சித். இதனை நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது.