சென்னை: தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) கணேசன் கல்வியியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது: கடந்த மார்ச் மாதத்தில் நடத்தப்பட்ட பிஎட், பிஎட் (சிறப்பு கல்வி) எம்எட் மறறும் எம்எட் (சிறப்பு கல்வி) செமஸ்டர் தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கல்வியியல் கல்லூரிகளின் முதல்வர்கள் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில், தங்களுக்கான லாக்-இன் மற்றும் பாஸ்வேர்டு-ஐ பயன்படுத்தி தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஒவ்வொரு கல்லூரிக்கும் உரிய லாக்-இன் இணைப்பு பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் உள்ளது. தேர்வு முடிவுகள் தனியாக கல்லூரிகளுக்கு அனுப்பப்பட மாட்டாது.
The post பிஎட், எம்எட் செமஸ்டர் தேர்வு முடிவு வெளியீடு appeared first on Dinakaran.