பிஎப் கணக்கிலிருந்து ரூ.1 லட்சத்துக்கும் குறைவான தொகையை யுபிஐ மூலம் உடனடியாக எடுக்கும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி (இபிஎப்ஓ) சந்தாதாரர்கள், வீடு கட்ட, குழந்தைகளின் கல்வி கட்டணம் செலுத்த மற்றும் திருமண செலவுக்காக தங்கள் கணக்கிலிருந்து பணம் எடுக்க அனுமதிக்கப்படுகிறது. இதற்காக இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். அவர்களுடைய கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு 2 அல்லது 3 நாட்களில் அவர்களுடைய வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படுகிறது. இந்நிலையில், உடனடியாக யுபிஐ மூலம் பணம் எடுக்கும் வசதியை அறிமுகம் செய்ய பிஎப் அமைப்பு திட்டமிட்டுள்ளது.