புதுடெல்லி: பிஎம் கிசான் திட்டத்தில் கணவனும், மனைவி இருவரும் பணம் பெற்றுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்த திட்டத்தின்படி குடும்பத்தில் ஒரு உறுப்பினர் மட்டுமே இந்த சலுகையை பெற தகுதியானவர். என்றாலும் கணவர், மனைவி என இருவருமே பயன்பெற்றுள்ளது மத்திய வேளாண் அமைச்சகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (பிஎம்-கிசான்) திட்டத்தின் 31.01 லட்சம் பயனாளிகள் குறித்து ஆராயப்பட்டது. அதில் 17.87 லட்சம் பேர் கணவன்-மனைவி என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.