விஜய் தொலைக்காட்சியில் கடந்த நூறு நாட்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 8. இதனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வந்தார். இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், முத்துக்குமரன், ஜாக்லின், செளந்தர்யா, அருண் பிரசாத், தர்ஷிகா, பவித்ரா ஜனனி, விஜே விஷால், ஆர்.ஜே. ஆனந்தி, சுனிதா, ரஞ்சித், தர்ஷா குப்தா, சஞ்சனா, அக்‌ஷிதா, அர்னாவ், சத்யா மற்றும் தீபக் உள்ளிட்டோர் போட்டியாளர்களாக பங்கேற்றார்கள்.
வாரம் ஒரு போட்டியாளர் வீதம் வெளியேற்றப்பட்ட நிலையில், இறுதி வாரத்தில் முத்துக்குமரன், ஜாக்குலின், சவுந்தர்யா, பவித்ரா, விஷால் ஆகியோர் இருந்தனர். இதில் பணப்பெட்டி எடுக்கும் டாஸ்க்கில் குறித்த நேரத்தில் வீட்டுக்குள் வராத ஜாக்குலின் போட்டியை விட்டு எலிமினேட் செய்யப்பட்டார். இதனையடுத்து கிராண்ட் ஃபினாலே இன்று நடைபெற்றது. இதில் முதலில் பவித்ரா, பின்னர் விஷால் வெளியேற்றப்பட்டனர்.