இந்திய கிரிக்கெட் அணித்தேர்வைத் தீர்மானிப்பவர்கள் வீரர்களின் பி.ஆர் நிறுவனங்கள். வீரர்கள் இத்தகைய ‘லாபி’யின் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர் என்ற விமர்சனங்களை வெட்டவெளிச்சமாக்கும் விதமாக ஹர்ஷா போக்ளே பிசிசிஐ-க்கு நெத்தியடி பரிந்துரையை மேற்கொண்டுள்ளார்.
அதாவது உள்நாட்டுக் கிரிக்கெட் தான் இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவதற்கான கண்டிஷன், கட்டாயம், அளவுகோல் என்பதெல்லாம் வெறும் பீலா என்று இப்போது சாம்பியன்ஸ் டிராபி அணித்தேர்வில் பட்டவர்த்தனமாகியுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்திலிருந்து ரவி சாஸ்திரி – விராட் கோலி – வர்த்தக லாபி கூட்டணி கருண் நாயரை வெளியேற்றியது. ஆனால் அவர் விடாமுயற்சியுடன் தன் பாணி ஆட்டத்தை மாற்றிக் கொண்டு உள்நாட்டு குறைந்த ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் வெளுத்து வாங்கி வருகிறார்.