காசாவிலிருந்து பிணைக் கைதிகளை விடுவிக்கும் இஸ்ரேல் – ஹமாஸ் ஒப்பந்தம் எட்டப்பட்டது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அரசியல் பாதுகாப்பு அமைச்சரவையை கூட்டியுள்ளதாகவும் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
காசா பிணைக் கைதிகளை விடுவிக்கும் இஸ்ரேல் – ஹமாஸ் ஒப்பந்தம் கத்தார் தலைநகர் தோஹாவில் எட்டப்பட்டுள்ளது. முன்னதாக, போர் நிறுத்தத்துக்கான மத்தியஸ்தப் பணியில் அமெரிக்கா மற்றும் கத்தார் நாடுகள் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது மூலம் 15 மாதங்களாக நடந்துவந்த போர் முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் காசாவிலிருந்து பிணைக் கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் எட்டப்பட்டதை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதி செய்துள்ளார்.