
லக்னோ: இன்ஸ்டாகிராமில் இந்து கடவுள்களுக்கு எதிரான ஓர் அவதூறு வீடியோ கடந்த 27-ம் தேதி வெளியானது. மைனர் பெண் ஒருவர் வெளியிட்ட அந்த ஒரு நிமிட வீடியோவில் இடம்பெற்ற இந்து கடவுள்களுக்கு எதிரான கருத்துக்கு பலர் ஆட்சேபம் தெரிவித்தனர்.
அந்த மைனர் பெண் மற்றும் அவரது குடும்பத்துக்கு எதிராக இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின. காவல் நிலையத்தில் புகார் அளித்தன. இதன் அடிப்படையில் மைனர் பெண்ணை உ.பி. போலீஸார் தடுப்பு காவல் இல்லத்தில் வைத்தனர். அவரது பெற்றோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

