புதுடெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஆகஸ்ட் 8) மக்களவையில் வருமான வரி மசோதா 2025-ஐ திரும்பப் பெற்றார். மேலும், தேர்வுக் குழு பரிந்துரைத்த மாற்றங்களைச் சேர்த்த பிறகு அரசு புதிய மசோதாவை அறிமுகப்படுத்தும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஸ்ரீ பைஜயந்த் பாண்டா தலைமையிலான 31 உறுப்பினர்களை கொண்ட தேர்வுக் குழு, கடந்த பிப்ரவரி 13 அன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட வருமான வரி மசோதாவில் பல மாற்றங்களை பரிந்துரைத்திருந்தது. இந்தக் குழு 4,500 பக்கங்களில் புதிய வருமான வரி மசோதா 2025-ன் மீது 285 பரிந்துரைகளை வழங்கியது. இந்தக் குழு அளித்த பரிந்துரைகளை உள்ளடக்கிய வருமான வரி மசோதாவின் புதிய பதிப்பு ஆகஸ்ட் 11 அன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.