புதுடெல்லி: வரும் 13-ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேச உள்ளார். அப்போது பிரத மர் மோடிக்கு சிறப்பு விருந்து அளிக்கப்படுகிறது.
கடந்த மாதம் 20-ம் தேதி அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றார். கடந்த 27-ம் தேதி இரு தலைவர்களும் தொலைபேசியில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து டொனால்டு ட்ரம்ப் நிருபர்களிடம் கூறும்போது, “அமெரிக்கா, இந்தியா இடையே நல்லுறவு நீடிக்கிறது. பிப்ரவரி மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் மாளிகைக்கு வருவார்’’ என்று தெரிவித்தார்.