சென்னை: நெதர்லாந்து நாட்டின் விஜிக் ஆன் ஜீ நகரில் நடைபெற்ற 87-வது டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த ஆர்.பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார். 13 சுற்றுகளின் முடிவில் பிரக்ஞானந்தாவும், உலக சாம்பியனும் இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷும் தலா 8.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். இதையடுத்து நடைபெற்ற டைபிரேக்கரில் பிரக்ஞானந்தா 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தா நெதர்லாந்தில் இருந்து விமானத்தில் துபாய் வழியாக நேற்று காலை சென்னை வந்தடைந்தார். அவருக்கு, சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தமிழ்நாடு செஸ் சங்கம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பிரக்ஞானந்தா கூறியதாவது: