மதுரை: பிரதமர் மோடியின் ஜிஎஸ்டி வரி விதிப்பு மாற்ற அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: பிரதமர் சுதந்திர தின விழா உரையில், தீபாவளிப் பரிசாக ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. ஜிஎஸ்டி வரி முறையையே கைவிட வேண்டும், பழைய முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். பிஹார் தேர்தலை மனதில் வைத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது என்றாலும்கூட, அது மக்களுக்குப் பயனுள்ளதாக அமையும் என்பதால் வரவேற்கிறோம்.