புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் கடந்த 1656-ம் ஆண்டில் கட்டப்பட்ட ஜாமா மசூதி அமைந்துள்ளது. அங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொழுகையின்போது இமாம் சையது அகமது புகாரி கூறியதாவது:
சில சமூகவிரோதிகள் பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். நாட்டின் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்து வருகின்றனர். இந்த பிரச்சினைக்கு நீங்கள் (பிரதமர் நரேந்திர மோடி) தீர்வு காண வேண்டும். முஸ்லிம்களிடம் பேசுங்கள். அவர்களின் மனதின் குரலை கேளுங்கள். அவர்களது மனதில் நீங்கள் இடம் பிடிக்க வேண்டும்.