கொழும்பு: இலங்கை சென்றுள்ள பிரதமர் மோடிக்கு கொழும்புவில் சம்பிரதாய அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க பிரதமரை வரவேற்றார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக இலங்கைக்குச் சென்றுள்ளார். வெள்ளிக்கிழமை மாலை கொழும்புவில் உள்ள பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி சென்றடைந்தார். அங்கு அவரை இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹெர்தா, சுகாதாரத்துறை அமைச்சர் நலிந்தா ஜெயதிஸ்ஸா மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் உள்ளிட்ட ஐந்து முக்கிய அமைச்சர்கள் வரவேற்றனர்.