குவைத் சிட்டி: குவைத் அரசின் ‘தி ஆர்டர் ஆப் முபாரக் அல் கபீர்’ என்ற உயரிய விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று வழங்கப்பட்டது. இந்தியா, குவைத் இடையே 4 ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.
குவைத் அரசின் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் பயணமாக நேற்று முன்தினம் அந்த நாட்டுக்கு சென்றார். முதல் நாளில் தலைநகர் குவைத் சிட்டியில் இந்திய வம்சாவளியினரை அவர் சந்தித்து பேசினார். இந்திய தொழிலாளர்களுக்கு அவர் விருந்து அளித்தார். அவர்களோடு விருந்தில் பங்கேற்றார்.